மனித உடல் உறுப்புக்களில் மிக
முக்கியமானவை மூளையும் இதயமும்தான். விஞ்ஞானத்தால் விடை காண முடியாமல்
தவிக்கும் பகுதிகளுள் மூளைக்கே முதல் இடம். அதிசயத்தக்க
மூளையைப் பற்றிய முக்கியமான சில
விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நரம்பியல் நிபுணர் விஸ்வநாதன் கிருஷ்ணசாமி.
நம் அனைத்து உணர்வுகள், உணர்ச்சிகள்,
செயல்களை உள்வாங்கி அலசி ஆராயும் பிக்
பாஸ்... மூளை. ஆனால், அத்தகைய
மூளைக்கு உணர்ச்சி கிடையாது. வலி உணராது. மூளையில்
ஏதேனும் அறுவைசிகிச்சை செய்யும்போதுகூட, நோயாளிக்கு வலி துளியும் இருக்காது
. ஒவ்வொருவருக்கும் மூளையின் எடை சற்று

மாறுபடும்.
சராசரியாக ஆணின் மூளை 1.5 கிலோ
கிராம் எடைகொண்டது. பெண்ணின் மூளை, ஆண் மூளையின்
எடையைவிடச் சற்று குறைவு. மூளையின்
வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உட்பகுதி
மஞ்சள், வெள்ளை நிறத்திலும் காணப்படும்.
20 வயதான ஆணின் மூளையில் உள்ள
நரம்பு இழைகளின் மொத்த நீளம் 1,76,000 கிலோ
மீட்டர். அதே வயதுடைய பெண்ணின்
மூளை நரம்பு இழைகளின் நீளம்
1,49,000 கிலோ மீட்டர் இருக்கும். ஒரு
மூளையின் கனத்துக்கும், அதன் புத்திசாலித்தனத்துக்கும் எவ்விதத் தொடர்பும்
இல்லை. ஆனால் மூளை அளவுக்கும்
உடல் அளவுக்கும் உள்ள உறவு மிக
முக்கியம்.
மனித மூளையினுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன். அவற்றில் 100 பில்லியன் நியூரான்கள். இந்த நியூரான்களின் வலைப்பின்னல்தான்
புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞாபகம்,
தன்னுணர்வு எல்லாம். செயற்கை முறையில் நியூரான்கள்
இணைந்து அமைப்பது என்பது இந்த நூற்றாண்டில்
சாத்தியம் இல்லை.
கனவுகள், மூளைக்குள் ஏற்படும் செயற்கை நெருடல்கள் என்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள். உறக்கம் என்பது பல
படிநிலைகள் கொண்டது. தூங்குவதற்காகப் படுக்கையில் விழும்போது, முதலில் லேசான தூக்கம்
வரும். அதன் பிறகு, ஆழ்ந்த
உறக்கத்தில் ஆழ்வோம். அப்போது ஒரே நொடிப்
பொழுது கண் இமைகள் மூடிய
நிலையில் இடது வலதாக நகரும்.
இதை ஸிணிவி REM (Rapid Eye Movement
Sleep) என்போம். அப்போதுதான் கனவு வருகிறது. கனவில்
கதையோட்டம் போன்ற உணர்வு ஏற்படும்.
'என் மனசுக்குப் பட்டுச்சு... அப்படி செஞ்சேன்’, 'உனக்கெல்லாம்
மனசாட்சியே கிடையாதா’ என்றெல்லாம் மனதை மையப்படுத்தி பேசுவோம்.
ஆனால், உண்மையில் மனசு, ஆன்மா இதெல்லாமே
திருவாளர் மூளைதான். இதயம் என்பது ஒரு
பம்ப் மட்டுமே. மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் ரத்தத்தை
அனுப்பும் வேலையை மட்டும் செய்கிறது.
மூளைதான் பிரதான குரு. மற்ற
எல்லாமே சிஷ்யர்கள்தான்.
மூளையின் சில பகுதிகள் (பிரிமிட்டிவ்
ஏரியா) மிருக இச்சைகள் கொண்டவை.
பசி, தாகம், காமம் போன்ற
உணர்வுகள், தன்னைப் பாதுக்காக்க, அடுத்தவரைத்
தாக்க என வன்முறை உணர்வுகள்,
கோபதாபங்கள் எல்லாம் இயல்பாகவே ஒவ்வொருக்குள்ளும்
இருக்கின்றன. வாழ்வாதாரத்திற்காக நிறைய விஷயங்களை மூளை
தனக்காகப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். அதற்கான நேரம் மற்றும்
அவசியம் வரும்போது உடனடியாக அதைச் செயல்படுத்தும்.
மூளையின் மிக முக்கிய பகுதியான
பினியல் க்ளான்ட், இதிலிருந்து சுரக்கும் மெலடோனின் எனும் ஹார்மோன் விழிப்பு/உறக்க சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.
அருமையாக வயலின் வாசிக்கும் விஞ்ஞானி
ஐன்ஸ்டீன், ஒரு மாலை வேளையில்
வயலின் வாசித்தபடி இருந்தார். அப்போது அங்கு வந்த
புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் இவரது இசையைக்
கேட்டு கேலியாகச் சிரித்தார். ''நான் வயலின் வாசிக்கும்போது
சிரிக்கிறீர்களே, நீங்கள் நகைச்சுவை வேடத்தில்
நடிப்பதைப் பார்த்து நான் எப்போதாவது சிரித்திருக்கிறேனா?''
என்றார் ஐன்ஸ்டீன்.
அதுதான் மூளையின் டைமிங்!